மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த அமைச்சகங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்..
நகர்ப்புற விவகாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்திற்கு 54 ஆயிரத்து 581 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாயும், கல்வி அமைச்சகத்திற்கு 93 ஆயிரத்து 224 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 55 ஆயிரம் கோடி ரூபாயும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 101 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 531 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 690 கோடி ரூபாயும், உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 547 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்திற்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 948 கோடி ரூபாயும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 4 லட்சத்து 78 ஆயிரத்து 196 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.