உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட் தேஜஸ் மார்க்-2 விமானத்தின் புதிய ரகம், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும், என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் கூறியுள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதவாக்கில் இந்த விமானம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன் அதிவேக சோதனை, 2023-ம் ஆண்டு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இந்த விமானம், சக்திவாய்ந்த என்ஜின்கள், பெரிய வடிவமைப்பு, அதிக சுமை தாங்கும் திறன், அடுத்த தலைமுறை மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தும் திறன் போன்ற சிறப்புகளை கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.