கொரோனா தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் உணவு வழங்கும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள ஐஆர்சிடிசி, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் ரயில்களில் உணவு வழங்கும் சேவை நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் யெஸ்காம் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ரயில்ரெஸ்ட்ரோ நிறுவனம் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்க அனுமதி பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதற்கட்டமாக 60 நகரங்களில் தனது சேவையைத் தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ரயில்ரெஸ்ட்ரோ, இம்மாதத்தின் நடுப்பகுதியில் 450க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.