ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் ஒரு லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்கம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மாலை 6 மணி வரை ஒரு லட்சத்து 19ஆயிரத்து 847 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் அதிகம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால், இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.