ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 114 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. போர் விமானங்களின் திறன், வல்லமை மற்றும் அதன் விலை தொடர்பாக விமானப் படை பல்வேறு நிறுவனங்களை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சார்பு இந்தியா திட்டத்தில் ஒரு பகுதியாக 114 விமானங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. 83 இலகு ரக தேஜாஸ் விமானங்களை 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்க, அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.