OTT தளங்களில் திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்களை திரையிடுவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியில் உருவான தாண்டவ் வெப் சீரிஸ், அமேசான் பிரைமில் வெளியாகி, அண்மையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. OTT தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்கள் சட்ட விதிகளின் கீழ் வராததால், இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில்., பல்வேறு புகார்கள் எழுவதால் OTT தளங்களின் செயல்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.