போலிச்சான்றிதழ்கள் தொடர்பான வழக்கில் இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 194 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவ் பாரதி பல்கலைக்கழகம் என்ற பெயரில் ராஜ்குமார் ராணா என்பவர் கல்வி அமைப்பை இமாச்சலப்பிரதேசத்தில் நடத்தி இதன் மூலம் 17 மாநிலங்களில் போலி சான்றிதழ்களை விற்பனை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் 400 கோடி ரூபாய்க்கு மேல் ராணா குடும்பத்தினர் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.