கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள வி.கே.சசிகலா, வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 நாட்களில், உடல்நலம் தேறி உள்ளதாகவும், இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்ய, மருத்துவக் குழுவினர் பரிந்துரை அளித்துள்ளதாக, பெங்களூர் அரசு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிஸ்சார்ஜ் ஆனாலும், வி.கே.சசிகலா, வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.