மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பான மனு மீதான விசாரணையின் போது, அரசாணை அமல்படுத்தப்படாததால், கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் பாப்பையா பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, 2009ஆம் ஆண்டு அரசாணை அமுல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா என பிப்ரவரி 3ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.