இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஸ்கெனாசியிடம், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்காணித்து வருகிறார். மும்பையிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.