காஷ்மீரில் முழுக்க முழுக்க பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்டுள்ள தேநீர் கடை, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குல்மார்க் பகுதியில் குடில் போன்ற அமைப்பில் பனிக்கட்டிகளாலே தேநீர் கடை உருவாக்கப்பட்டுள்ளது. கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கடையில் மேஜை, நாற்காலி என அனைத்தும் பனிகட்டிகளாலே அமைக்கப்பட்டுள்ளன.
15 அடி உயரமும், 26 அடி சுற்றளவும் கொண்ட இந்த கடையில், ஒரே நேரத்தில் 16 பேர் அமரலாம். ஆர்வத்துடன் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பனிக்கடையில் அமர்ந்து ரசித்து மகிழ்கிறார்கள்..