டெல்லியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிங்குவில், விவசாயிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்திய போலீசார், கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர்.
போராட்டம் நடத்தும் விவசாயிகள் இடத்தை காலி செய்யுமாறு, அங்கு திரண்டவர்கள் கூறியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கைகலப்பு, கல்வீச்சு நடைபெற்றதை அடுத்து, போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தடியடி நடத்தினர்.
இந்த களேபரத்தில், கையில் வாள் வைத்திருந்த நபர் ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அந்த நபரை போலீசார் சூழ்ந்துகொண்டு அடித்து விரட்டினர்.
இதேபோல, டெல்லியின் மற்றொரு எல்லைப் பகுதியான திக்ரியிலும், உள்ளூர்வாசிகள் எனக் கூறிக்கொண்ட நபர்கள் திரண்டு, போராட்டம் நடத்தும் விவசாயிகள் இடத்தை காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.