ஜார்க்கண்டில் தனியார் துறை வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கச் சட்டமியற்ற உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
தும்கா என்னுமிடத்தில் பேசிய அவர், கல்வி வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய குடியேற்றக்கொள்கையை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
தனியார் துறை வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய விரைவில் சட்டமியற்றப்படும் என அவர்த் தெரிவித்தார். சிறுபான்மையர் நடத்தும் பள்ளிகளிலும் ஆசிரியர் நியமனத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.