டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விளக்கம் அளிக்க விவசாய சங்கத் தலைவர் தர்சன் பால் சிங்குக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிராந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்சன் பால் சிங்குக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தக் காவல்துறையினருடன் செய்து கொண்ட உடன்பாட்டை விவசாயிகள் மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது.
டிராக்டர் பேரணியின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர்ப் பட்டியலை வழங்கும்படியும் அதில் அறிவுறுத்தியுள்ளது.