ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் சில பகுதிகளில் பறவைகள் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதா என சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அம்மாநிலத்தில் இதுவரை ஏற்கனவே கிட்டத்தட்ட 7 ஆயிரம் பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், 17 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜல் மகால் பகுதியில் காகங்கள், மயில்கள், புறாக்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுகாதாரத்துறையினர் விரைந்துள்ளனர்.