வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதால், இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 937 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 271 புள்ளிகளும் சரிவடைந்தன.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், புதிய வரி விதிப்பு ஏதேனும் இருந்தால் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே முன்னதாகவே லாபத்தை எடுக்க முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் சந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.