டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் காவல்துறையினர் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கியதே வன்முறைக்கு வித்திட்டதாக கூறினார்.
வன்முறையில் பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வன்முறையை ஏற்படுத்தாமல், அமைதியாக அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விவசாயிகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா அறிவுறுத்தினார். இதனிடையே டெல்லியில் பாதுகாப்புக்கா கூடுதல் துணை ராணுவப்படையினர் களமிறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.