கர்நாடகாவில் 4வது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும், முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிரான கருத்து வேறுபாடு தொடர்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து வேறுபாட்டால், தற்போது வரை கர்நாடக அமைச்சரவை 4 முறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
4வது முறை விரிவாக்கத்தின் போது புதிதாக 7 அமைச்சர்கள் எடியூரப்பா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அங்கு எடியூரப்பாவுக்கு எதிரான கருத்து வேறுபாடு தொடர்கிறது.
பாஜக ஆட்சி அமைய உதவிய 16 எம்.எல்.ஏ..க்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் ஆக்கப்படலாம் என அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.