குடியரசு தின விழாவில் வலிமை மிகுந்த ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,எதிரிகளின் பீரங்கிகளை குறி தவறாமல் தகர்க்கும் 3 ஆம் தலைமுறை நாக் ஏவுகணை, ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவி 7 கி.மீட்டர் தூரம் வரை உள்ள பீரங்கிகளை தகர்க்க உதவும் ஹெலினா ஏவுகணை ஆகியவை அணிவகுப்பில் இடம் பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வீரர்கள் சுமந்து சென்று ஏவுக்கூடியதும், 2,5 கி.மீட்டர் தூர இலக்கையும், துல்லியமாக தாக்க கூடியதுமான ஏவுகணை, மிக்-35 ஹெலிகாப்டரில் இருந்து ஏவி பீரங்களை தவிடு பொடியாக்கும் சாண்ட் ஏவுகணை, அர்ஜூனா பீரங்கியில் இருந்து ஏவப்படும் லேசர் தொழில் நுட்பம் கொண்ட பி.ஜி.எம் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.