பழைய 5,10,100 ரூபாய் நோட்டுகள் திரும்பபெறப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் பழைய 5,10,100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த தகவலில் உண்மை இல்லை என்று ரிசர்வ் வங்கி டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புதிய 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.