எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 13 வீரர்கள் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் சைக்கிள் பேரணி நடத்தினர்.
வடக்கு பர்கானா மாவட்டம் பசிராத் என்ற இடத்தில் கடந்த 10ந் தேதி தொடங்கிய இந்தப் பேரணி, அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட இந்தோ- வங்கதேச எல்லையில் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து மார்ச் 17ம் தேதி வங்கதேசத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் பிறந்தநாளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இருநாட்டு எல்லையில் உள்ள ஃபுல்பாரி என்னுமிடத்தை வீரர்கள் வந்தடைந்தபோது, ராணுவ உயரதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.