புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வர, ராகுல்காந்தி ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். துணை நிலை ஆளுநர்
கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி, வருகிற 26 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக கூறிய நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்தார்.