சைனோவாக் தடுப்பு மருந்து சோதனைக்கான செலவைப் பகிர்ந்துகொள்ளச் சீனா கூறியதால், இந்தியாவிடமிருந்து தடுப்பு மருந்தை வங்கதேசம் வாங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு 20 லட்சம் முறை செலுத்தும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து நன்கொடையாக அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர 3 கோடி முறை செலுத்தும் அளவு மருந்தை சீரம் நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்க வங்கதேசம் உடன்பாடு செய்துள்ளது.
சீனாவிடம் இருந்து மருந்தை வாங்கச் சோதனைக்கான செலவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் சீனாவைத் தவிர்த்து இந்தியாவிடம் இருந்து மருந்தை வாங்க வங்கதேசம் முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.