பறவைக்காய்ச்சல் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ள நிலையில் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பது குறித்து FSSAI எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில வழிகாட்டுதல் நெறிகளை வெளியிட்டுள்ளது.
சிக்கன் போன்ற இறைச்சியையும் முட்டையையும் சமைக்கும் போது, தொற்றுக்கிருமி பரவாமல் இருக்க 74 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரைகுறையாக சமைக்கப்பட்ட இறைச்சியையும் ஆப்பாயில் போன்ற முட்டைகளையும் உண்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைகளை கையால் தொடுவதைத் தவிர்க்குமாறும், உயிரிழந்த பறவைகளை வெறும் கையால் தொட வேண்டாம் என்றும் இறைச்சியை திறந்த வெளியில் வைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.