குடியரசு தின விழா பேரணியில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெறுமென ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 26 ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பில், பினாகா ஏவுகணை ஏவும் அமைப்பு, பீஷ்மா பீரங்கிகள், பி.எம்.பி - 2 மற்றும் டி -90 ரக பீரங்கிகள், தற்காலிக பாலம் அமைக்கும் எந்திரம், பிரமோஸ் ஏவுகணைகள், மின் அணு போர் ஆயுதமான சம்விஜய், வான் பாதுகாப்பு ஆயுதம் உள்ளிட்டவை அணி வகுப்பில் இடம் பெறுமென கூறப்பட்டுள்ளது.
இத்துடன் வழக்கமான ஆயுதங்களுடன் ராணுவ வீர ர்கள் அணிவகுத்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.