கடந்த 8 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் பயன்படுத்தி வந்த ரகசிய சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.
கதுவா மாவட்டத்தின் பன்சாரில் இந்திய ராணுவ நிலை அருகே இருந்து, பாகிஸ்தானின் ஷக்கார்கர் மாவட்டத்தின் அபியால் டோக்ரா பகுதிக்கு இந்த 30 அடி ஆழ சுரங்கப்பாதை செல்கிறது.
குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் பழையதாகக் கருதப்படும் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ள பகுதியில்தான், 2012ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளன.
கவனத்தை திசைதிருப்பி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியாக இந்த வேலையில் பாகிஸ்தான் படைகள் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.