வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்ததை ஏற்க மறுத்து விட்ட விவசாயிகள், நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தின் போது டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்திருப்பதால், அதற்குள் சுமூக முடிவு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.