இந்தியாவுடன் நெருங்கிய உறவு நிலவுவதாகவும், வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்தச் சீனா முயலவில்லை என்றும் வங்கதேச வெளியுறவு இணையமைச்சர் சாரியர் ஆலம் தெரிவித்துள்ளார்.
விவேகானந்தர் அறக்கட்டளை நிகழ்ச்சியில் காணொலியில் பேசிய சாரியர் ஆலம், இந்தியாவுடனான வங்கதேசத்தின் நட்பின் ஆழத்தையும் விரிவையும் சீனா அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சீனாவுடனான தங்கள் உறவு பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவற்கானது என்றும், சீனாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முயற்சி எதையும் வங்கதேசம் செய்யவில்லை என்றும் சாரியர் ஆலம் தெரிவித்தார்.
வங்கதேசத்தின் பொருளாதாரம் வலுவாக உள்ளதால் சீனாவின் கடன்பொறியில் சிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.