இலங்கை கடற்படை கப்பல் மீனவர்கள் படகில் மோதி 4 மீனவர்கள் பலியான விவகாரத்தில், இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதிர்ஷவசமான இந்த சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதர் மூலம், இலங்கை வெளியுறவு அமைச்சருக்கும், டெல்லியிலுள்ள இலங்கை பொறுப்பு தூதரிடமும் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள் உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.