குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் மணீஷ் அகர்வால், குடியரசு தின பேரணி நடைபெறும் தூரம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
விழா அழைப்பிதழ் இல்லாத யாருக்கும் அனுமதி இல்லை என்ற அவர், பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த நிலையில் குடியரசு தின விழாவை பாதிக்கும் விவசாயிகளின் எந்த ஊர்வலம், பேரணிக்கும் அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்தார்.