இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோ உலகின் முன்னணி கூட்டுறவு நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இப்கோ நிறுவனம் நாடு முழுவதும் 36 ஆயிரம் கூட்டுறவுச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டது.
உலகக் கூட்டுறவு நிறுவனங்களின் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், உலகின் முன்னணி முந்நூறு கூட்டுறவு நிறுவனங்களில் இப்கோ முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் 51 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதும், நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிகப் பங்களிப்பைக் கொடுத்துள்ளதும் இதற்குக் காரணம் என இப்கோ மேலாண் இயக்குநர் அவஸ்தி தெரிவித்துள்ளார்.