அரசு உதவி பெறும், உதவி பெறாத தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்கான அறிவிப்பை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா சூழலில் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒடிசா மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து நடப்புக் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள கல்விக் கட்டணத்தைத் தொகையின் உயர்வுக்கேற்ப 6 விழுக்காடு முதல் 26 விழுக்காடு வரை குறைப்பதற்குக் கல்வித் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.