ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமெரிக்க அதிபரராக பதவி ஏற்கும் ஜோ பைடன், துணை அதிபராக பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மணற்சிற்பங்களைச் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ளார்.
புதிய அமெரிக்க அதிபரையும் துணை அதிபரையும் வாழ்த்தும் வகையில் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள சிற்பத்தில் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம், அந்நாட்டின் தேசியக் கொடி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.