காஷ்மீரில் எதிர்கட்சிகள் அமைத்துள்ள குப்கர் கூட்டணியில் இருந்து சஜாத் கனி லோன் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி வெளியேறியது.
காஷ்மீரில் 370வது பிரிவை மீட்டெடுக்கவும், மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து குப்கர் என்ற பெயரில் கூட்டணியை ஏற்படுத்தின.
இந்நிலையில் கடந்த கவுன்சில் தேர்தலில் மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு போதிய இடங்கள் ஒதுக்கவில்லை என்று கூறியும், தங்கள் கட்சியைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இருப்பதாகவும் கூறி கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளது.