சபரிமலை கோவிலில் மண்டல, மகர விளக்கு வழிபாட்டு காலம் நாளையுடன் நிறைவடைகிறது.
அந்த கோவிலில் 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. 18 ஆம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெற்றது. இதில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்து
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நாளை பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் சாமி தரிசனம் செய்த பிறகு நடை அடைக்கப்படும். அப்போது சன்னிதானத்தில் மற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.