அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஷும் நாளை பதிவியேற்க உள்ள நிலையில், இருவரின் உருவ படத்தை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த ஜக்ஜோத் சிங் ரூபல் என்பவர் ஓவியமாக தீட்டியுள்ளார்.
இதனை அவர்களுக்கு பரிசளிக்க விரும்புவாத தெரிவித்த ஜக்ஜோத் சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்பது பெருமைக்குரிய ஒன்று எனக் கூறினார். இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர்களின் ஓவியத்தையும் அவர் வரைந்துள்ளார்.