அருணாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செயற்கை கோள் புகைப்படத்தின் படி, அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய 101 வீடுகள் கொண்ட கிராமத்தை நிர்மானிக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இதே போன்ற உள்கட்டமைப்பு கட்டுமானங்களை, சீனா கடந்த ஆண்டுகளிலும் செயல்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.