குஜராத்தின் அகமதாபாத் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்குக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டியபின் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டுக்கு முன் 225 கிலோமீட்டர் நீளத்துக்கு மட்டுமே மெட்ரோ ரயில் பாதைகள் இருந்ததாகவும், கடந்த ஆறாண்டுகளில் 450 கிலோமீட்டருக்கும் அதிகமாக மெட்ரோ ரயில்பாதைகள் பணி முடிக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி நாட்டின் 27 நகரங்களில் ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.