கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் இதனால் அதனை போட்டுக் கொள்ள தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் உள்ள கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழக அரசிற்கு பாராட்டுத் தெரிவித்தார்