அடுத்த சில வாரங்களில் அண்டை நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தடுப்பூசி இயக்கம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒருசில வாரங்களில் நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
முதலில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவும், அதன்பின் தேவையின் அடிப்படையில் விலைக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட உள்ளன. மியான்மர், பிரேசில் ஆகிய நாடுகள் தடுப்பு மருந்துகளை வாங்க இந்திய நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துள்ளன.