கர்நாடகாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, மராத்தி பேசுபவர்கள் வசிக்கும் பாரம்பரிய பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்போம் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா எல்லையை ஒட்டிய கர்நாடக ஆட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களை, மகாராஷ்டிராவுடன் இணைக்க நடைபெற்று வரும் முயற்சியால் இருமாநிலங்களுக்கிடையே, பல ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இது குறித்து தியாகிகள் தினத்தன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தவ்தாக்கரே, கர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மகாராஷ்டிராவுக்குள் கொண்டு வருவதுதான் மாநில எல்லை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.