கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கர்நாடக அரசு, சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு மேல்சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பசுவதை தடைக்கு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது. இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும்.
ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெறலாம். சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.