மத்தியப் பிரதேசத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர், விதிகளை மீறி தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்தார்.
ஹோஷாங்காபாத் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் சுகாதார ஊழியர் ஒருவர், ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததைப் பொருட்படுத்தாமல், காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு செல்போனில் பாட்டுக் கேட்டவாறு தண்டவாளத்தின் குறுக்கே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அதிவேக ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தை ஓடிக் கடக்க முயன்றபோது, ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.