புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்றும், தேவையான திருத்தங்களைச் செய்வது பற்றி விவாதிக்கலாம் என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், புதிய சட்டங்கள் தொடர்பான அச்சத்தைப் போக்க ஒரு முன்மொழிவை விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
வைக்கோலைத் தீவைத்து எரிப்பதைத் தடுக்கும் சட்டம், மின்சாரத் திருத்தச் சட்டம் ஆகியன பற்றி விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் 3 சட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாது என்ற அவர் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை விட்டுவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.