இந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அணுசக்தி மருத்துவ மையம், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பைக் ஆம்புலனசை உருவாக்கி உள்ளன.
பாதுகாப்பு படையினருக்கு அவசர மருத்துவ வசதி தேவைப்படும் நிலையிலோ,அல்லது மோதல் நடைபெறும் இடங்களில் காயமடையும் வீரர்களை காக்கவோ இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 18 ஆம் தேதி முதல் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.