டெல்லியில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகையையொட்டி ராஜபாதையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையுள்ள ராஜபாதையில் இன்று முதல் 4 நாட்கள் குடியரசு நாள் ஒத்திகை நடைபெறுகிறது. இந்த நாட்களில் ராஜபாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ரபி மார்க், ஜன்பத், மான்சிங் சாலை ஆகிய இடங்களில் ராஜபாதையை வாகனங்கள் தாண்டிச் செல்லப் பகல் 9 மணி முதல் 12 மணி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் டெல்லி வான்பரப்பில் கிளைடர், பாராசூட், வெப்பக்காற்று பலூன், ஆளில்லா விமானங்களை ஜனவரி 18 முதல் 31 வரை பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழலில் குடியரசு நாள் ஒத்திகையில் முகக்கவசம் அணிந்த குறைந்த எண்ணிக்கையிலான படைவீரர்களே பங்கேற்கின்றனர். அணிவகுப்பு ஒத்திகையும் வழக்கத்தைவிடப் பாதித் தொலைவுக்கே நடைபெறுகிறது.