கொரோனா தடுப்பு மருந்து குறித்த அச்சத்தைப் போக்க முதலமைச்சர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தடுப்பூசி போடப் பிரதமர் அனுமதிக்க வேண்டும் எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் 8 மையங்களில் 24 ஆயிரம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
ராஜீவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார். முதலாவதாக முனுசாமி என்கிற மருத்துவப் பணியாளருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.