டெல்லியில் பனிமூட்டத்தால் பார்வைப் புலப்பாடு குறைந்ததால் 80 விமானங்கள் புறப்படுவதும், 50 விமானங்கள் தரையிறங்குவதும் தாமதமாகின.
நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. டெல்லி, லக்னோ, அமிர்தசரஸ் நகரங்களில் கடும் பனிமூட்டத்தால் பார்வைப் புலப்பாடு மிகவும் குறைவாக உள்ளது.
இதே நிலை நாளைக்கும் நீடிக்கும் என்றும், திங்களன்று பனிமூட்டம் சற்றுக் குறையும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பனிமூட்டத்தின் காரணமாக டெல்லியில் இருந்து 80 விமானங்கள் புறப்படுவதும், பிற நகரங்களில் இருந்து டெல்லிக்கு வந்த 50 விமானங்கள் தரையிறங்குவதும் தாமதமாயின.