ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை ஆட்களுக்குச் செலுத்தி இரண்டு கட்டச் சோதனைகள் முடிந்துள்ளன.
இந்நிலையில் மூன்றாம் கட்டச் சோதனைக்குத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்றாம் கட்டச் சோதனையில் 1500 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.