கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பிறகும் கூட கொரோனா வர வாய்ப்பிருப்பதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது அனைத்து வகை தடுப்பூசிகளுக்கும் உள்ள பொதுவான இலக்கணம் என்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானி சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் 28 நாட்கள் இடைவெளியில் அவசரகால சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் கோவிஷீல்டின் செயல்தன்மை குறித்து விளக்கிய விஞ்ஞானிகள், இரண்டும் வெவ்வேறு தொழில்நுட்பத்தால் உருவானவை என்றும், இரண்டு மருந்துகளையும் கலந்து பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
28 நாட்கள் இடைவெளியில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போடப்பட்டால் அதன் பலன் சிறப்பாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.